2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

விளையாட்டுக் கிராமத்திற்காக 6 குளங்கள் இழக்கப்படும் நிலை: சபாநாயகர் தலையீடு

Super User   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

ஹம்பாந்தோட்டை சூரியவௌவில் 6 குளங்களை நிரப்பி, 1435 ஏக்கரில் விளையாட்டுக் கிராமம் அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தால்  பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளின் தேவைகள் குறித்து கூடுதல் அக்கறை செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று கோரினார்.

இவ்விளையாட்டுக் கிராமம் அமைக்கும் திட்டத்தால் 6 குளங்கள்  மறைந்துவிடும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கூறியமைக்கு அமைச்சர் பதிலளிக்கும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விவசாயிகளின் ஜீவனோபாயம் பாதிக்கப்படும் எனக்கூறிய புத்திக பத்திரண எம்.பி., இவ்விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் வினவினார்.

அப்போது, அவர்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்படும் என அமைச்சர் அளுத்கமகே பதிலளித்தார்.  'நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறையிலிருந்து அவர்களுக்கு நீரை கொண்டுவர முடியாது' எனவும் அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X