Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற முதலாவது வாகன விபத்துச் சம்பவத்தின் போது குறித்த வீதியின் இரும்பு வேலி சேதமாக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 5 இலட்சத்து 34ஆயிரத்து 960ரூபாவினை செலுத்துமாறு விபத்துக்குள்ளான சாரதிக்கு கெஸ்பாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி சாரதி, தனது வாகனத்தை அதி வேகத்தில் செலுத்தியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு மேற்படி தொகையை தண்டப் பணமாக செலுத்துமாறு கெஸ்பாவ நீதவான் சமத் மதநாயக்கா தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி கஹதுடுவ, 8ஆவது மைல் கல்லுக்கு அருகில் வைத்து இந்த வாகன விபத்து சம்பவித்திருந்தது. விபத்துக்கு காரணமாக காலி, போத்தல பிரதேசத்தைச் சேர்ந்த சாரதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
kulathooran Wednesday, 08 February 2012 09:00 PM
மரமேறி விழுந்தவனை மாடு மட்டும் மிதிக்கவில்லை, முதலாவது விபத்தும் சாதனை, நஷ்ட ஈட்டு தண்டனையும் சாதனை.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Thursday, 09 February 2012 06:57 AM
அதிவேக நெடுந்சாலையில் அதிவேக மாகதான் செல்வார்கள். அதற்கு பெயர்தான் அதிவேகே நெடுஞ்சாலை. அப்படி என்றால் அதிமெதுவான நெடுஞ்சாலை என்று பெயர் வைக்கலாம் அல்லவா?
Reply : 0 0
manoharan Friday, 10 February 2012 12:56 AM
ஓடும் வாகனங்கள் ரோட்டில் ஓடுவதற்கு தகுதியானதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago