Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 16 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ எனும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கல்வீச்சுகளினால் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மீது கற்களை வீசவேண்டாம் என பொலிஸ் எச்சரித்த அதே தினத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நவம்பர் 27 ஆம் திகதி இந்நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57 வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் 1969 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் உடனடியாக தகவல் தருமாறு போக்குவரத்து பொலிஸார் கோரியுள்ளனர்.
meenavan Tuesday, 17 January 2012 02:01 PM
அதிவேக சாலை வருமானம், சேதமடைந்த வாகனங்களினது நஷ்ட ஈடு வழங்கலுக்கும் பயன்படுமா? காப்புறுதி நிறுவனங்கள் இனிமேல் அதிவேக பாதை வாகனங்களுக்கு விசேட காப்புறுதிகளை அறிமுகம் செய்வார்களோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
52 minute ago
1 hours ago