2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

மார்ச் மாதத்தில் காலி இசை விழா 2012

Kogilavani   / 2012 ஜனவரி 31 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

'காலி இசை விழா 2012' எதிர்வரும் மார்ச் மாதம் 3,4 ஆம் திகதிகளில் காலி சமனல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 'யாழ்ப்பாண இசை விழா 2011' இன் சகோதர விழாவாக இடம்பெறும் இந்நிகழ்வு  குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பங்களாதேஷ், இந்தியா, நோர்வே, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாரம்பறிய கலைவடிவங்களும் மேடையேற்றப்படவுள்ளதாக இவ்வூடகவியளாலர் மாநாட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்கள்,

'கடந்த வருடம் இடம்பெற்ற யாழ். இசை விழாவில் 13000 பேர் கலந்துகொண்டு பாரம்பரிய கலைகள் குறித்த அறிவினை பெற்றுக்கொண்டனர். இதனது தொடர்ச்சியாக  இடம்பெறும் காலி இசை விழாவில் கடந்த வருடத்தைபோன்றே உள்நாட்டு வெளிநாட்டு பாரம்பரிய கலை வடிவங்கள் மேடையேற்றப்படவுள்ளன.

இவ்விழா இரண்டு விதமாக நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1 மணிவரை சமகால கலையம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலான செயலமர்வுகள், உரையாடல்கள் என்பன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் 10 மணி வரை கிராமிய நடனங்கள் மேடையேற்றப்படவுள்ளன. இந்நிகழ்வுக்கான கட்டணம் இலவசமாகும்.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கு உரித்தான கிராமிய கலைகளை மேடையேற்றுவதனுடன் அக்கலைகளில் பங்குபற்றும் கலைஞர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவது, அக்கலைகளை எதிர்கால சந்ததியினர் அறிந்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு ஆவணமாக வழங்குவது, நமது நாட்டு கலைகளை வெளிநாட்டவர்கள் அறிந்துக்கொள்வது என்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக இந்த 'காலி இசை விழா 2012' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோர்வே தூதரகம் மற்றும் யு.எஸ்.எய்டியின்; நிதியுதவியில், அருஸ்ரீ கலையரங்கு மற்றும் சேவாலங்கா அமைப்பு,நோர்வேயின் ரிக்ஸ்கொன்சேர்டன்ஸ் அமைப்பு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் மேற்படி இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது எனவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில்,  இசைக் கூட்டுத்தாபனத்தின் கலை இயக்குநர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன், நோர்வே தூதுவர்  ஹில்டிடே ஹார்ல்ஸ்டட், யு.எஸ்.எய்ட் பணிப்பாளர்  ஜேம்ஸ் பெட்னர், சேவாலங்கா நிதியத்தின் நிகழ்ச்சி நிரல் இயக்குநர் கௌஷல்யா நவரத்ன, ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்:கித்சிறி டீமெல்)

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X