2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

ஹெரோயின் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் ஷாபி 

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கிண்ணியா - மட்டக்களப்பு வீதி, ரீ சந்தியில் வைத்து  ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலை பிராந்திய போதை பொருள் தடுப்பு பிரிவால் நேற்று (10) கைது செய்யப்பட்டு, கிண்ணியா  பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதான நபர்களிடம் இருந்து 5.6  கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பொதி ஒன்று கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கிண்ணியா மாஞ்சோலைசேனை  பிரதேசத்தை  வசிப்பிடமாகக் கொண்ட குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இவருக்கு போதைப் பொருள் பாவிக்கும் பழக்கம் இருப்பதோடு, இவர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும்,  இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X