2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வைத்தியசாலை ஊழியர்களுக்கு தொற்று இல்லை

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

  
கிண்ணியா தள  வைத்தியசாலையின் பெண்களுக்கான 3ஆவது  விடுதியில்  சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களும், அதே விடுதியில் கடமை செய்யும் வைத்தியசாலை ஊழியர்களும் நேற்று (5) அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

எனினும், எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், மேலும் தெரிவிக்கையில், “கிண்ணியா தள வைத்தியசாலையின் பெண்களுக்கான   
3ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, அந்த விடுதியோடு தொடர்பான 15 நபர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

“எனினும், எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
  
“வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளியாக  இனங்காணப்பட்டவர், குறிஞ்சாக்கேணி சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட சூரங்கல் கிராம சேவகர் பகுதியைச் சேர்ந்தவராவார். இவரே எமது சுகாதாரப் பிரிவில்    முதலாவது  கோரோனா வைரஸ் தொற்றாளியாவார்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நபரோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய 22 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவருடன் மிக நெருக்கமானவர்கள் ஏழு பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இருந்து இம்மாதம் 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட 15 பேரின் இரத்த மாதிரிக்கான  பிசிஆர் பரிசோதன அறிக்கை இன்று (06) கிடைத்துள்ளது. 

இதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இந்தப் பரிசோதனை, இங்கு வியாபாரம் செய்கின்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X