Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
“நமது இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல. எனவே, பட்டதாரி நியமனத்தில் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டக் கற்கை நெறிகளை உள்வாரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ கற்க வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்துள்ளார்கள். இந்தப் பட்டம், இலங்கையில் அங்கிகரிக்கப்பட்டது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சான்றுப்படுத்துகின்றது.
“பட்டதாரி நியமனத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது 'அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
“தேர்தலுக்கு முன் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்ட போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
“பட்டதாரி நியமனத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்கள் புறக்கணிப்படுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அரசு இந்த விடயத்தை உடனடியாக மீள் பரிசீலனை செய்து தகுதியான சகல பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago