Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்துக்கு திருகோணமலை மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை நகர், மூதூர், சேருவில, கிண்ணியா, கந்தளாய், புல்மேட்டை உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வைத்தியசாலைகள் இயங்குகின்ற போதிலும் ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளை பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
அரச அதிகாரிகள், மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும் சமூர்த்தி கொடுப்பனவுகளையும் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
இவற்றைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago