Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஜூன் 01 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகள் வீடொன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சூரியபுர பகுதியிலே இச்சம்பவம் நேற்றிரவு(31) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக சூரியபுர பகுதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் உள்ளோருக்கு எவ்வித உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் வீட்டின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும், வீட்டினுள் அடுக்கி வைத்திருந்த நெல் மூடைகளை உறிஞ்சி குடித்து சேதப்படுத்தியுள்ளதாகவும்,வீட்டிலுள்ள உணவு பாத்திரங்களை காட்டு யானை எடுத்து வீசியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் காட்டு யாறைகள் கிராமத்திற்குள் புகுந்து வீடொன்றினை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக வனஜீவராசி அதிகாரிகளுக்கும் பொலிஸாரும் முறையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
யானை வேலிகள் அமைக்கப்பட்டும் வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமத்திற்குள் புகுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி யானைகளினால் உயிர்சேதங்களும் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .