Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூன் 27 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இன்று (27) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது .
நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இதில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago