Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணத்தில் நச்சு அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், விஷம் இல்லாத அரிசி உற்பத்தி அவசியமென வலியுறுத்தினார்.
விவசாயம் தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போதே, ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் நெல் சந்தைப்படுத்தல் வாரியத்தின் கீழ், 7,400 மெற்றிக் தொன் நெல்லும் 3,400 மெற்றிக் தொன் நெல்லை சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெல் அறுவடைகளை விரிவு செய்ய வேண்டுமெனில், விவசாயிகளை வழிநடத்துவதே காலத்தின் தேவை என்றும் ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, திருகோணமலை – வெருகலிலுள்ள விவசாயிகள் தங்கள் உற்பாத்திகளைக் கொண்டுசெல்வதற்கு கட்டயரு, புன்னையாடி பாலங்களை சரிசெய்ய வேண்டுமெனவும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago