2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விவசாயிகளுக்கு கச்சான் விதைகள் வழங்கல்

Editorial   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில், மக்கள் சேவை மன்றத்தால், 35 விவசாயிகளுக்கு, இறக்கக்கண்டி கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வைத்து நேற்று (08) கச்சான் விதைகள் வழங்கப்பட்டன.

மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் மற்றும் விவாசாயப் போதனாசிரியர் வாஜித் ஆகியோர் இதில் பங்குபற்றியிருந்தனர்.

”கொவிட்-19யைத் தோற்கடித்து, தன்னிறைவான பொருளாதரத்தை மேம்படுத்துவோம் ”எனும் தொனிப்பொருளில் அமுலாக்கப்பட்டுவரும் விசேட செயற்றிட்டத்தின் கீழ், மேற்படி கச்சான் விதகைள் வழங்கப்பட்டன. 

இந்த திட்டத்திற்கு தமிழ் போரம் மலேசியா நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியதுடன், மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களம் மற்றும் நிலாவெளி கமலநல சேவைகள் திணைக்களம் ஆகியன தொழிநுட்ப அனுசரணை வழங்கியிருந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .