2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு; தலா 5,000 வழங்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், எப்.முபாரக்  

கமத்தொழில், கமநல காப்புறுதி சபையால், விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு, அனைத்து விவசாய ஓய்வூதிய பயனாளிகளுக்கும், ஏப்ரல் மாதத்தில்,  தலா 5,000 ரூபாய் என்றடிப்படையில் செலுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதென, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். 

இதனடிப்படையில், இக்கொடுப்பனவை திருகோணமலை மாவட்ட பயனாளிகளும் எதிர்வரும் 6,7,8ஆம் திகதிகளில் உரிய தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையத்துக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதற்கு முன்னர், இக்கொடுப்பனவு மிகக் குறைவாகவே வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .