Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள், திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்று, கொரோனா வைரஸ் தாக்கத்தால்; ஏற்படும் விளைவுகளையும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியுமான துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதுடன் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் பிரதான மக்கள் கூடும் இடங்களான வங்கிகள், மருந்தகங்கள், சந்தைகள், பஸ்கள், பஸ் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களிலும் விழிப்புணர்வுச் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் இளம் பரோபகாரர்களது
அனுசரணையில், வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்;
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் திருகோணமலைக் கிளையினரின் இவ்வாறான முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago