2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

விபத்தில் மாணவி படுகாயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்) 

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் நேற்று (13)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹதிவுலவெவ பகுதியிலிருந்து பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிளின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் இவர் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் எனவும் தெரிய வந்துள்ளது.

தற்போது விபத்துடன் தொடர்புடைய இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X