2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிளொன்று, வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில், கோமரங்கடவல, பக்மீகம, புலிக்கண்டி குளம் பகுதியைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபுறுபண்டாகே இரோஷன் சதுரங்க (32 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து திருகோணமலை 22ஆவது படை முகாமுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், இவ்விபத்து ஏற்பட்டதாக, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம், பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X