2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விசேட தேவையுடைய சிறுமிக்கு உதவியளிப்பு

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிறுமிக்கு, பால்மா உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பொருள்கள், மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரும் தெவனிபியவர இந்ராராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியால் இன்று (25) வழங்கப்பட்டன.

விசேட தேவையுடைய  தனது பிள்ளையின்  நோயைக் குணப்படுத்தும் பொருட்டு சொத்துகளை விற்று, வறுமைக் கோட்டின் கீழ்  வாழ்ந்து வருகின்ற இக்குடும்பத்துக்கு உதவுமாறு மொரவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மேலும், சிறுமியின் வளர்ச்சிக்குத் தேவையான பால்மா, உலர் உணவுப் பொருள்களை மாதாந்தம் வழங்குவதாகவும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X