2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பொங்கல் விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

Editorial   / 2020 மே 26 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த பொங்கல் விழா, ஜுன் மாதம் 01ஆம் திகதியன்று நடைபெறவிருக்கின்றது.

எனினும், இந்தப் பூஜை நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து சிறப்பிக்கமுடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளை பின்பற்றி அடியார்கள் கோயில் வீதியைச் சுற்றி பொங்கலும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பக்தர்கள் பொங்கல் பொருள்களையும் நேர்த்திக்கடன் பொருள்களையும் வழங்கவிரும்புவர்கள்  நாளை மறுதினம் (28) தொடக்கம் இம்மாதம் 31ஆம் திகதி வரை கோயிலில் ஒப்படைக்குமாறு, பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குருவும் ஆதீனகர்த்தாவுமாகிய பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X