Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகள், பிரதேச செயலக ரீதியாக பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில், பிரதேச சபை மண்டபத்தில், நேற்று (18) நடைபெற்றது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் அபிவிருத்தி முன்மொழிவுகள் இதன்போது பெறப்பட்டன.
கிராமிய அபிவிருத்தியை துரிதப்படுத்தும் அரசாங்கத்தினுடைய தேசிய வேலைத் திட்டத்துக்கு அமைய, கிராம சேவகர் பிரிவு தோறும் முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன.
இம் முன்மொழிவுகளை கிராமத்திலிருந்து பெறுவதன் மூலமாக கிராமத்தின் தேவைகளுக்கேற்ப அபிவிருத்தி தேவைகளை மேற்கொள்ளக்கூடியதாக அமையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல இதன்போது தெரிவித்தார்.
“திருகோணமலை மாவட்டத்திற்கு எதிர்வரும் வருடத்தில் 1,574 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற இருக்கின்றது. இதன்மூலம் கிராம உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
“கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை மக்களிடம் இருந்து பெறுமாறு நிதியமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
“அதன் ஓர் அங்கமாக இந்த வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகள் காணப்படுகின்றன” என திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago