2025 ஜனவரி 29, புதன்கிழமை

லொறியுடன் மோதுண்டதில் யானை பலி

Janu   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் வைத்து கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறியுடன் பெண் யானையொன்று மோதுண்டதில் பெண் யானை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (9) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். 

கந்தளாய் லஹபத்த காட்டுப் பகுதியில் வசித்து வந்த பெண் யானை வீதியை கடக்கும் போது இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் காரியாலய பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஏ.பீ.கே.நந்தசேன தெரிவித்துள்ளார். 

விபத்தை ஏற்படுத்திய லொறியை கண்டுபிடித்துள்ளதுடன் விபத்து தொடர்பாக வனவிலங்கு திணைக்களம் மற்றும் அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அஸ்ஹர் இப்றாஹிம்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .