2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

லொறி விபத்து; சாரதி படுகாயம்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்.எம்..பரீட், .ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில், இன்று (03) காலை லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக லொறி பயணித்துக்கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X