2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ். இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

Princiya Dixci   / 2021 மார்ச் 14 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு, குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திர ராசா சிந்துஜன் (21 வயது) என்ற இளைஞனின் சடலம், நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர், மோட்டார் சைக்கிளில் வருகை தந்து, கோவில் வழிபாடுகளை முடித்து விட்டு, நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காகச் சென்ற போது, நீரில் மூழ்கிய ஒருவருடைய சடலம், வெள்ளிக்கிழமை (12) மீற்கப்பட்டது.

இந்நிலையில், மற்றுமொரு இளைஞருடைய சடலம் தேடப்பட்டு வந்த நிலையில், இவருடைய சடலமே நேற்று சனிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளதாகவும் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் சடலத்தை  உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .