2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

யானைகள் அட்டகாசம்

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, லிங்கபுரம் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளன.

இதன்போது இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு வீட்டிலிருந்து உபகரணங்கள் பயன்தரும் வாழை மரங்கள், கரும்பு போன்றவற்றையும் துவம்சம் செய்துள்ளது. மேலும் வீட்டிலிருந்தவர்கள் யானைகளிடமிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து லிங்கபுரம் பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக தமது பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுவரை 10 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததோடு, பலர் அங்கவீனம் அடைந்துள்ளனர்.

வீடுகளில் இருப்பது அச்சமாக உள்ளதாகவும், தமது உடமைகளையும், பயிர்களைகளையும் காட்டு யானைகள் அடித்து சேதமாக்குவதாகவும், இதுவிடயமாக அதிகாரிகளிடம் சொன்னால் அவர்களும் பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், லிங்கபுரம் பகுதியை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க உரிய தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X