2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யானைகளுக்காக மட்டும் ஓடோடி வரும் அதிகாரிகள்

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதியம்மன்கேணி கிராமத்துக்குள் இன்று (16) புதன்கிழமை  அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை பகுதியளவில் தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளன.

அத்தோடு கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் 30 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கூலித்தொழில் செய்து ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்தும் தாம் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டுவருவதால் இதற்குரிய நஷ்டஈட்டையும், யானைப் பாதுகாப்பு வேலியையும் பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

யானைகளுக்கு ஏதாவது நடந்தால் ஓடோடி வரும் அதிகாரிகள் , யானைகள் மனிதர்களையோ அவர்களது உடமைகளுக்கோ சேதப்படுத்தினால் அதனை கண்டு கொள்வதில்லையென இவர்கள் விசனம் தெரிவிப்பதோடு இதுவரை தமது கிராமத்தில்  காட்டு யானைகள் தாக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆதியம்மன்கேணி கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X