2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யானை மின் வேலியில் சிக்குண்டு சிறுவன் பலி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு, 08 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ ஐங்கரன் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் என சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வருகைதந்த சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுவன் மலசல கழிப்பதற்காகச் சென்ற போது யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சிறுவனின் சடலம், தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார வேலியை யானை பாதுகாப்புக்கு போட்டுவிட்டு அணைக்காமல் சென்று சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X