2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Freelancer   / 2022 ஜூலை 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின்  வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுபகுதிக்குள் விறகு எடுக்க சென்ற ஒருவரை காட்டு  யானை தாக்கியதையடுத்து, கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அபேநாயக்க ஹேரத் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில் சமைப்பதற்காக காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X