2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி; மேலுமொருவர் படுகாயம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி, 96ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று, மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேற்று (06) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 

தம்பலகாமம் - ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம் (67 வயது) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர், சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .