Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 23 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மொரவெவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரை கட்சியில் இருந்து இடைநிறுத்தி உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
கட்சியின் ஒழுங்கு விதிகளையும் நெறிமுறைகளையும் மீறியமை மற்றும் கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பிர்களான யாக்கூப் தம்பி ஜெனீர்தீன் மற்றும் ஆர்.எம்.எஸ்.விஜயசிங்க ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டவர்கள்.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் இவர்களுடைய கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதுடன், இக்கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மொரவெவ பிரதேச சபையின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago