2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மொரவெவ பட்ஜெட் தோல்வி

Editorial   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

மொரவெவ பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) மேலதிக 6 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

மொரவெவ  பிரதேச சபை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியனவற்றின் வசம் இருந்த போதிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் நிதியறிக்கை தோற்கடிக்கப்பட்டடுள்ளது. 

இந்த  நிதியறிக்கை, பிரதேச சபையின் தவிசாளரும் தெவனிபியவர விகாரையின் விகாராதிபதியுமான பொல் ஹேன்கொட உபரத்ன தேரரினால் சபையில் இன்று (15)  சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, நிதியறிக்கையை வாக்கெடுப்புக்கு விடக் கோரி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சபையில் கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து, நிதியறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது மேலதிக 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X