2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மூதூர் மக்களுக்கு எச்சரிக்கை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் சுகாதார பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு, மூதூர் சுகாதார பணிமனை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் மூதூர் சுகாதார பணிமனைக்குட்பட்ட மூதூர், பட்டித்திடல், தோப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் மூதூர் பொலிஸ் நிலைய பொலிஸார் உள்ளிட்ட  33 பேர் கொரோனா தொற்றாளர்களாக இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என மூதூர் சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், மூதூர் பிரதேசத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும், மதஸ்தலங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளன.

மேலும், மூதூர் பொலிஸ் நிலையம் முற்றாக முடக்கப்பட்டு, அங்கு சேவையாற்றிய அனைத்து பொலிஸாரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு சேவை பெற வருவோருக்கு சம்பூர் பொலிஸ் நிலையத்தின் ஊடாக சேவைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X