2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘முஸ்லிம் அடையாளம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக் 

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் எனவும் அந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளதெனவும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் இன்று (01)விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது.

“இந்தப் பணியகத்துக்கான தவிசாளர், மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.

“எமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிப் பணியக தவிசாளர், மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லை.

“கிழக்கு மாகாணம் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம். இந்த அடையாளம் வேறு மாகாணங்களில் இல்லை. கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த இந்த அடையாளம் இப்போது அரசாங்கத்தால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

“இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடாகவும் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் செயற்பாடுகளுமாகவே இருந்து வருகின்றது. இதனை சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X