Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தித தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி பணியகத்தின் தவிசாளர் நளிந்த கஸ்தூரி, Solidarite Laique நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயதுல்லாஹ், கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சாஸியா, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஏ.ஜமுனா உதயலதா ஆகியோர், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினர்.
முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்தரச் சான்றிதழ் (high Lavel ) பயிற்சி வழங்குவதுத் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது
மேலும் முன்பள்ளிக் கல்வித் திட்டத்தை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது
புதிய கற்பித்தல் முறை தொடர்பாகவும் முன்பள்ளி கல்வி திட்டத்துக்கான பாட அலகுகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், ஒரு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும், இதற்கான வேலைத்திட்டங்களை மிக விரைவில் முன்னெடுக்கபட வேண்டும் எனவும் தவிசாளரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
இதன்போது முன்பள்ளி கல்வித் திட்டத்தை விருத்தி செய்வதற்காக Solidarite Laique நிறுவனத்தின் ஊடாக நிதி உதவி கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்துக்கு வழங்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயதுல்லாஹ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago