Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட 731 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உலர் உணவுப் பொதிக்கான வவுச்சர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே. கே.ஜி.முத்துபண்டாவிடம் சொலிடரைட் லெய்கியு ஸ்ரீலங்கா (Solidarite Laique Sri Lanka) அமைப்பின் தேசியப் பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயத்துல்லாஹ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து இன்று (30) கையளித்தார்.
கொரோனா தொற்றுக் காரணமாக வருமானத்தை இழந்து கஷ்டப்படும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுக்கான வவுச்சர்களே இதன்போது கையளிக்கப்பட்டன.
ஆறு மாத கால வரையறைக்குள் இலங்கையிலுள்ள அனைத்து சதோச விற்பனை நிலையங்களிலும் வவுச்சர்களுக்கான விரும்பிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago