2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய காட்டு யானை

Janu   / 2023 ஜூன் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் 

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, கண்டல்காடு கிராமத்தில்  இன்று(11) காலை  காட்டு யானை தாக்கியதில், குடும்பஸ்தர் ஒருவர், பலத்த காயங்களுக்கு உள்ளாகி, கிண்ணியா  தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கிண்ணியா மகாமாறு  பகுதியைச் சேர்ந்த ஆசுதீன் அன்சார் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை இவர் தனது வீட்டிலிருந்து, மோட்டார் சைக்கிளில்  கண்டல்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள, மகாவலி கங்கை கொட்டியாரகுடாவில்  மீன்பிடிக்க சென்ற போதே தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X