2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீனவ சங்க கட்டடம் உடைப்பு; ஒருவர் கைது

Editorial   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பைரூஸ் தெரிவித்தார்.

இன்று  (22) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி சங்க நிர்வாக தெரிவு அண்மையில் இடம்பெற்ற நிலையில் இந்த  நாசகார வேலைகளை செய்தவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.  

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டடமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .