2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மின் கம்பியில் சிக்கி இளைஞன் மரணம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர், நேற்று (15) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு-காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் கிருஷாந்தன் (22 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞன், பன்குளம், ஆறாம் வாய்க்கால் பகுதியிலுள்ள தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே இவ்வனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X