2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

மின் கட்டணத்தை குறைக்க கோரி கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர், எப்.முபாரக்

மின்சாரக் கட்டண அதிகரிப்பை நிறுத்தக் கோரி, தீப்பந்தம் ஏற்றிய கவனயீர்ப்பு போராட்டமொன்று, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்றிரவு (19) முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மின் பாவனையாளர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டோர் கையில் தீப்பந்தந்தை ஏற்றியவாறும், “மின் கட்டணத்தைக் குறை” மற்றும் “மின் கட்டண அதிகரிப்பை நிறுத்து” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பினர்.

“மின் பாவனை அதிகரிப்பு, டீசல், எரிபொருள் பற்றாக்குறை, அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. நாளாந்தம் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றமும் சாதாரண பொதுமக்கள் உட்பட அனைவரையும் பாதித்துள்ளது. இவ்வாறு போனால் எங்களதும் விவசாயிகளினதும் நிலை என்னவாகும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துரைத்தனர்.

“எனவே, மின்சார கட்டணத்தைக் குறைக்கவும் மின் கட்டண அதிகரிப்பையும்  நிறுத்துமாறும், நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X