Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்
திருகோணமலையில், “நீதிக்காக எங்கள் குரல்” எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூப்லி மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை மேம்படுத்துவதாற்காக திருகோணமலை மாவட்ட பெண்களே முன்னெடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டன.
ஆய்வின் இறுதியாக பெண் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு அவர்கள் எதிர் நோக்கம் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவற்றுக்கான தீர்வுகள் அடங்கிய ஆவணம் கிழக்கு மாகாண சமூக வைகள் திணைக்கள பணிப்பாளர். எஸ்.மதிவண்ணன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜீ. சுகந்தினி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இப் பங்குதாரர் கலந்துரையாடலில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம்,அமரா பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் இளையோர் தன்னார்வ அமைப்பினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும், இவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது உண்மைத்தன்மையுடன் பரவலாக்கப்பட வேண்டும். பலர் பொய்யான தகவல்களுடன் பல சலுகைகளை அனுபவித்து வருவதனை நாம் எங்களது புலங்களில் காண்கின்றோம்.
புதிய கொள்கைகள் நடைமுறைக்கேற்ப வரையப்படவேண்டும். அவை சட்டங்களாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்..பெண் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவை மனிதாபிமானத்துடன் அணுகப்படவேண்டும். அவர்களது கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago