2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

மஜ்மா நகருக்கு குடிநீர் வழங்கல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

ஓட்டமாவடி - மஜ்மா நகரில் வரட்சியால் பாதிக்கப்பட்டு, குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு பௌசர்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, பிரதேச செயலாளரால் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இவ்வாறு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இதில் அப்துர் ரஹ்மான் வீட்டுத்திட்டம், முஹைதீன் அப்துல் காதர் வீட்டுத்திட்டம், சிராஜிய்யா அரபுக்கல்லூரி, பிலால் பள்ளிவாசல் மற்றும் றஹ்மா ஜும்ஆ பள்ளிவாசல் போன்றவற்றுக்கு ஆரம்பக் கட்டமாக நீர்த் தாங்கி வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

குடிநீர் வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலக அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர் கே.புவிதரன், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் ஏ.எல்.சமீம், பிரதேச சபை சாரதி முஹம்மது ஜபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X