2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

“மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்”

Janu   / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை(03) அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்குகொண்ட  இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  கதிரவேலு சண்முகம் குகதாசன், மக்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பற்றி அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன் போது, துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தியுள்ள 5226 ஏக்கர் நிலப் பகுதியில் 1887 ஏக்கர் நிலப் பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே இந்தப் பகுதியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என காந்திரமாக கூறினார். அதே போன்று வெல்வெறி பகுதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் உடனடியாக விடுவித்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருகோணமலை நகரத்தில் அமைந்துள்ள மக்ஹய்சர் விளையாட்டு அரங்கம் பாரம்பரியமாக திருக்கோணமலையில் பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்தது எனவும் இந்த விளையாட்டு அரங்கை மீண்டும் சரி செய்து உருவாக்குவதன் மூலம் பல இளம் விளையாட்டு வீரர்களது ஏக்கத்தை தீர்ப்பதோடு அல்லாமல் சர்வதேச போட்டிகளை நடத்தி நாட்டிற்கு வருமானத்தையும் வெளிநாட்டு நாணய மாற்று வருவாயையும் பெருக்க இயலும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திருகோணமலை தள மருத்துவமனையில் போதிய வசதியின்மையால் மகப்பேறு காலத்தில் பெண்கள் பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே சிறப்பான நடுவம் ஒன்று அமைக்க வேண்டுமென்றும், மருத்துவமனைக்கு செல்லும் வீதியினை செப்பனிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் 03 மதகுகளும்,  திருகோணமலை உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 12 வீதிகளும், 07 மதகுகளும் மறு சீரமைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

 ஏ.எச் ஹஸ்பர்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X