2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Freelancer   / 2022 ஜூன் 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தானியகம பிறீமா விடுதிக்கு அருகில் போதை மாத்திரைகளை   வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 450 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் அதிரடி படையினர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X