2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பொது சுகாதார பரிசோதகருக்கு கொவிட்

Princiya Dixci   / 2022 ஜூலை 28 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு  கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையில் கடமை ஆற்றி வரும் 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதே, தொற்று உறுதியாகியுள்ளது.

காய்ச்சல், அதிகளவிலான சளி காரணமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தற்போது கொவிட் தொற்று மீண்டும் பரவிக் கொண்டு வருவதால் முகக் கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சமூக இடைவெளிகளை பேணி நடந்து கொள்ளுமாறும், கைகளை தொடர்ச்சியாக கழுவுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X