Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:14 - 0 - 126
அபு அலா, மட்டு.துஷாரா
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது முழுமையான கவனத்தினை செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தொழில் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி (திருமதி) கிரிதன் சுகந்தினி தெரிவித்தார்.
“போதையற்ற மாணவர்கள் சமூதாயத்தை உருவாக்கல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று மாலை (13) திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் கருத்தரங்கு மண்டபத்தில் காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமையல்ல. தனது பிள்ளையின் கல்வி செயற்பாடுகளையும், அவர்கள் யார் யாருடன் நட்பு ரீதியான தொடர்புகளை வைத்துள்ளார்கள் என்பதையும் நன்கு அவதானிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பிள்ளைகள் பிழையான நண்பர்களின் உறவினால் வழிதவறிச் செல்லும் நிலைமை ஏற்படுகின்றது.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவ சமூதாயத்தைக்கூட விட்டு வைக்கவில்லை. அவர்களின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு பழியாகுவது எமது பிள்ளைகளாகிய இளம் சந்ததியினராகும்.
எமது பிள்ளைகளை பாதுகாப்பது ஆசிரிய சமூகம் மாத்திரமல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்களின் பிள்ளைகள் மீது முழுமையான கவனத்தினை செலுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதை அனைத்துப்பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது, இலங்கை காப்போம் நிறுவத்தினால் ஏற்பாடில் திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் வளாகத்தில் அதிதிகளினால் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் மாணவர்கள் ஒன்றியத்தின் தமிழறி தலைவர் தியாகராசா துகேந்தன், சன்சைன் முன்பள்ளி பாடசாலையின் பொறுப்பதிகாரிகள், இலங்கை காப்போம் நிறுவத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago