Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 25 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் பெறுமதிவாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளனவெனத் தெரியவருகின்றது.
கந்தளாய் பிரதேசத்துக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் உள்ள முதிரை, கருங்காலி, தேக்கு போன்ற விலை கூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளனவெனவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வன இலாகா அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு விடுமுறையில் சென்ற பின்னர் அதிகளவிலான மரங்கள் இவ்வாறு வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, மஹதிவுல்வெவ குளத்துக்குப் பின்னாலுள்ள காட்டுப் பகுதியில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனவெனவும் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் இயந்திரங்கள் மூலம் மரங்கள் வெட்டப்படுவதாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய போதிலும் பொலிஸார் கவனிக்காமல் இருந்ததாகவும், இக்காட்டுப் பகுதியில் அதிகளவில் சட்ட விரோத செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டுப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு, சட்ட விரோதமாக மரங்கள் வெட்டியவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago