2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பூம்புகார் முடக்கம்; திருகோணமலையில் 67 தொற்றாளர்கள்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம வேசகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபைக்குட்பட்ட இப்பகுதி, உப்புவெளி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்கு உட்பட்டது.

குடைமாதா சந்தியில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகாமையிலும் அப்பகுதிகுள் உள் நுளையும் இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சேதனைச் சாவடி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியேறவோ அல்லது புதிய நபர்கள் உள் நுளையாமலும் கண்காணிக்கப்பட்டுகின்றது.  .

இப்பகுதியில் இதுவரை ஆன்டிஜன் பரிசோதிக்கப்பட்டவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையின் போதும் இப்பகுதி முற்றாக முடக்கப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு,  பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) மாத்திரம் 67 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா, இன்று (28) தெரிவித்தார்.

இதன்படி, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் 31 பேரும், திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் 27 பேரும், கிண்ணியா பிரதேசத்தில் 5 பேரும், குறிஞ்சான்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதி மற்றும் தம்பலகாமத்தில் தலா  ஒருவரும், கந்தளாயில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .