2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புற்றுநோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர், எப்.முபாரக்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை பெற்று வரும் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 25 பேருக்கு, மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.சிறீபதி தலைமையில் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ப.சுதன் உள்ளிட்டோர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இக்கொடுப்பனவு 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு, மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X