2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

’புத்தாண்டை வீட்டில் இருந்தவாரே கொண்டாடுவோம்’

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

தாய் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, தமிழ்- சிங்கள புத்தாண்டை வீட்டில் இருந்தவாரே கொண்டாடுவோம் என்று, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது  சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் உட்பட அனைத்து சவால்களிலிருந்தும் மீண்டெழுந்து அபிவிருத்தியடைந்த தேசமாக  எமது தாய்நாட்டை மாற்ற இத்தருணத்தை அனைவரும் பயன்படுத்த திடசங்கற்பம் கொள்வோம் என்றார். 

திருகோணமலை மாவட்டம் இதுவரை கொவிட்19 வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் இதனை தொடராக பேண அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் அவர் மக்களிடம் வேண்டிக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .