Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பத்தினிபுர கிராமத்தில் பனை பொருள் ஊடான உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சிநெறி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க, குறித்த பயிற்சிநெறியை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல், பனம் பொருள் கைப்பணியாளர் சங்க அங்கத்தவர்களுக்காக பத்தினிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்பு சார் உற்பத்தியில் ஈடுபடும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இந்த இலவச பயிர்ச்சிநெறி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த பகுதியில் பனை உற்பத்திசார் கைப்பணி பொருட்கள் உள்ளிட்ட சந்தைப்படுத்தல் நிலையமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் தேசிய அருங்கலைப் பேரவையின் உதவி மாகாணப் பணிப்பாளர் பொன்கரன், கிராம சேவகர் நேசராஜ்குமார் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .