2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாலம் அமைப்பது தொடர்பில் ஆளுநர் கள விஜயம்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலையில் உள்ள பூனெனியடி பகுதியில் புதிய பாலம் கட்டுவது குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (27) குறித்த பகுதிக்கு கள விஜயம் செய்தார்.

உரிய இடத்தில்  பாலம் அமைப்பது பற்றி அவர் ஆராய்ந்தார்.

இங்கு பாலத்தை அமைப்பதன் ஊடாக, 05 கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதை எளிதாக்க முடியுமென, ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

மாகாண வீடமைப்பு அதிகார சபையின்  தலைவர் ஜே.ஜெனார்த்தனன் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  அதிகாரிகளும் இதில் உடனிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X