Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கியாஸ் ஷாபி
கிண்ணியா - அண்ணல் நகர் பகுதியில் அமைந்துள்ள அல் அதான் மகா வித்தியாலயத்துக்கு முன்னால் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (3) காலை கைது செய்துள்ளனர்.
கைதான நபரிடம் இருந்து 5.05 கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் பொதி கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கிண்ணியா -2, ரஹ்மானியா பகுதியைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .